கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு: தமிழகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு... முக்கிய அமைச்சர்கள் வருகை

Report Print Deepthi Deepthi in இந்தியா

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 27-ம் தேதி இரவு திடீர் ரத்த அழுத்தம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர், அவரது உடல்நிலைகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நலம்குறித்து காவேரி மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று வெளியான அறிக்கையில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதிலிருந்து, மருத்துவமனை இருக்கும் பகுதியில் தி.மு.க தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இரவு முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அங்கு காவலர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.

மேலும், மருத்துவமனையில் முக்கிய அமைச்சர்கள் வந்துள்ளனர்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் முக்கிய பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவேரி மருத்துவமனை முன்பு கூடி எழுந்து வா என்று கோஷமிட்டபடி காத்திருக்கின்றனர்.

தொண்டர்கள் குவிவதால் சுற்றுப்புறச் சாலைகளில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் காவேரி மருத்துவனையை நோக்கி திரும்பியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்