கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு! பரபரப்பான சூழ்நிலையில் முதல்வரை சந்திக்கவுள்ள துரைமுருகன்?

Report Print Santhan in இந்தியா

கலைஞர் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் சூழ்நிலையில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால், மருத்துவர்கள் அவரை 24 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு காரணமாக மருத்துவமனை முன்பு குவிந்துள்ள தொண்டர்கள் எழுந்து வா தலைவா என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏன் இந்த சந்திப்பு என்பது குறித்து எந்த ஒரு உறுதியான தகவல் வெளிவரவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்