கருணாநிதியின் உடல் உறுப்புகளை இயங்க வைப்பதில் சவால்: முதல் முறையாக கணவரை பார்க்க வந்த தயாளு அம்மாள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, காவேரி மருத்துவமனைக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் முதன்முறையாக இன்று வருகை தந்தார்

கருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடைசியாக ஜூலை 31ம் தேதி, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், வயோதிகம் காரணமாக முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே அடுத்தகட்ட சிகிச்சை இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல் முறையாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இன்று காவிரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்