இப்படி குழந்தைகளை கொடூரமாக கொலை செய்வார் என்று நினைக்கவே இல்லை! பொலிசாரிடம் கண்ணீர் விட்ட மனைவி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். கட்டடத் தொழிலாளியான இவர் திருமணமாகியும் பல ஆண்டுகள் குழந்தை இல்லாத காரணத்தினால் அமராவதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார்.

இவர்களுக்கு புனித் (5), சஞ்சை (3) மற்றும் ராகுல் (2) என்ற குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில் வெங்கடேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு அமராவதியிடம் சண்டை போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

தொடர்ந்து இப்படி செய்து வந்ததால், அமராவதி, இனியும் இவருடன் வாழ்க்கை நடத்த முடியாது என்று கூறி,

குழந்தைகளை அழைத்துக்கொண்டு அம்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து அவரை அழைத்து வருவதற்காக நேற்று இரவு மாமியாரின் வீட்டிற்கு சென்ற வெங்கடேஷ், அங்கு சண்டை போட்டுள்ளார்.

அப்போது தனது மூன்று குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்த போது மனைவி மேல் இருந்த கோவத்தால், மூன்று குழந்தைகளையும் ஆற்றில் தூக்கிவீசி கொலைசெய்து விட்டு, வீடு திரும்பியுள்ளார்.

அங்கு சென்று எதுவும் நடக்காதது போல் வீட்டில் நிம்மதியாக தூங்கியுள்ளார். அதன் பின் காலை வெங்கடேஷின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் குழந்தைகள் எங்கே என்று கேட்ட போது மூன்று குழந்தைகளையும் காணவில்லை; எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை என்று நாடகமாடியுள்ளார்.

இதற்கிடயில் குழந்தைகளின் சடலம் அப்பகுதியில் இருக்கும் ஆற்றில் மிதந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணைக்கு பின்னரே வெங்கடேஷ் குழந்தைகளை ஆற்றில் தூக்கி வீசியது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கூறிய அவரது மனைவி அமராவதி இவ்வாறு குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்வார் என கற்பனை செய்து பார்க்கவில்லை என பொலிசாரிடம் வேதனையுடன் கூறியுள்ளார்.

குழந்தைகளை ஆற்றில் வீசியபோது தான் குடிபோதையில் இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்