சென்னையில் பெரும் வெள்ளத்திற்கு வாய்ப்பு: பேரிடர் மேலாண்மை வாரியம் கடும் எச்சரிக்கை!

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் வரும் ஆகஸ்டு மாதம் அதிகளவில் மழை பெய்தால் பெரும் வெள்ளத்திற்கு வாய்ப்பிருப்பதாக பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கிய வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக, நல்ல மழை பெய்தது. இதனால் சென்னை வாசிகள் அனைவரும் நல்ல மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர்.

இந்த மகிழ்ச்சியில் பெரிய வெடிகுண்டை போட்டது போல பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை வானிலை மையம் அறிவித்தது போல, இந்த மாதம் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார கடலோர பகுதிகளில் பலத்த கனமழை பெய்தால், வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அதில் கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர், வண்டலூர், கோயம்பேடு உட்பட 300 முக்கிய இடங்கள் பாதிக்கப்படும் எனவும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன்பு ஏற்பட்ட வெள்ளம் போல் ஆகிவிடாமால் தற்போதே தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்