இளைஞரை ஒருதலையாக காதலித்த பெண்: காதலை ஏற்காததால் செய்த மோசமான செயல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் ஒருதலை காதலில் ஈடுபட்ட இளம்பெண் காதலனை கத்தியால் தாக்கியதோடு, பைக்குகளை எரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் திலீப்குமார், இவர் மகன் சிக்கூ.

சிக்கூவை அந்த பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருதலையாக காதலித்த நிலையில் காதலை சிக்கூ ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் நேற்றிரவு சிக்கூ வீட்டு வாசலில் நிற்கவைக்கப்பட்டிருந்த மூன்று பைக்குகளை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

இதை பார்த்து சிக்கூவின் உறவினர்கள் அங்கு வருவதற்குள் பெண் தப்பியோடியுள்ளார், இதையடுத்து உறவினர்கள் பொலிசில் புகார் அளித்தனர்.

சிக்கூவின் உறவினர் கூறுகையில், ஏற்கனவே ஒருமுறை சிக்கூ தூங்கி கொண்டிருக்கும் போது அவரை கத்தியால் தாக்கினார், தற்போது பைக்கை எரித்துள்ளார் என கூறியுள்ளார்.

இதையடுத்து பெண்ணை பிடித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்