பாபநாசம் திரைப்பட பாணியில் அத்தையை கொன்ற 14 வயது சிறுவன்: திடுக்கிடும் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் அத்தையை கொலை செய்த சிறுவன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளதோடு, சிறுவனும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் சங்கரசுப்பு. இவர் மனைவி தமிழ்ச்செல்வி கடந்த 2-ஆம் திகதி படுக்கையறையில் கை நரம்பு வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இது குறித்த பொலிசார் நடத்திய விசாரணையில் சங்கரசுப்புவின் தங்கை மகனான 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிவக்குமார் (14) அத்தை தமிழ்ச்செல்வியை கொன்றது தெரியவந்தது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், சிசிடிவி ககெமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது, மாணவன், தமிழ்ச்செல்வியின் வீட்டுக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

அதுதொடர்பாக மாணவனிடம் விசாரித்தபோது சுத்தியல் வாங்கச் சென்றதாகக் கூறினார். இருப்பினும் மாணவன் மீது எங்களுக்குச் சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து மாணவனிடம் விசாரித்தபோது உண்மையை ஒத்துக்கொண்டார்.

தமிழ்ச்செல்விக்கும் சிவக்குமாருக்கும் ஆரம்பத்திலிருந்தே பிரச்சனை இருந்துவந்துள்ளது.

சிவக்குமார் டிவி தொடர்ந்து பார்த்தால் ரிமோட்டை தமிழ்செல்வி பிடுங்கி கொள்வார்.

அடுத்து தன்னுடைய மகளிடம் சிவக்குமார் பேசுவதையும் தமிழ்ச்செல்வி விரும்பவில்லை. இதனால் அத்தையின் மீது வெறுப்பில் இருந்துள்ளார் மாணவன்.

இந்தச் சமயத்தில் பாபநாசம் படத்தை சிவக்குமார் பார்த்துள்ளார். அதில் கமல்ஹாசன் கொலையை மறைக்க பொலிசிடம் பயப்படாமல் தப்பிக்கும் காட்சிகள் இடம்பிடித்திருக்கும்.

அதை போலவே எங்கள் விசாரணையில் தைரியமாக சுத்தியல் வாங்கச் சென்ற கதையைத் தெரிவித்தார். இருப்பினும் சிசிடிவி பதிவால் எங்களிடம் சிக்கிக்கொண்டான் என கூறியுள்ளனர்.

சிவக்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், அத்தை தமிழ்செல்வி செய்த டார்ச்சரால் தான் அவரைக் கொலை செய்யும் அளவுக்குச் சென்றேன். அத்தையின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் எனக்குப் பிடிக்கவில்லை.

என்னுடைய உறவினர் ஒருவரின் பிறந்தநாளான்று அத்தையின் மகளோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, அங்குவந்த அவர் அனைவரின் முன் என்னை அடித்துவிட்டார். இதனால் அவமானத்தில் கூனிக்குறுகினேன். அதற்குப் பழிவாங்கத்தான் அவரைக் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்