குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த இளம்பெண்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் குடும்ப தகராறில் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலின் எஸ்.எல்.பி தெற்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்(வயது 37), ஆட்டோ டிரைவரான இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஐசக்(வயது 2), ரெப்கா(வயது 4) என்ற மகளும் உள்ளனர்.

அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அருணாசலம் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் வீடு திரும்பிய போது இரு குழந்தைகளும் பிணமாக கிடந்தன.

அதே அறையில் சரண்யா தூக்கில் தொங்கியுள்ளார், விபரம் அறிந்து விரைந்த பொலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

குடும்ப தகராறில் சரண்யா குழந்தைகளை கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது.

எனினும் சரண்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறவே, அருணை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்