ஆண் நண்பனை காப்பாற்ற மனைவி செய்த மோசமான செயல்: அதிர்ச்சியடைந்த கணவர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

வேலூர் மாவட்டத்தில் தனது ஆண் நண்பருக்காக கணவனை அடித்து மருத்துவமனையில் படுக்க வைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செந்தாமரை கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. சம்பவம் நடைபெற்ற அன்று கோயிலுக்கு வருமாறு தனது மனைவியை அழைத்துள்ளார் செந்தாமரை. ஆனால், தான் வரவில்லை என்று ஜெயந்தி கூறியுள்ளார்.

இதனால், தனியாக கோயிலுக்கு சென்ற செந்தாமரை, வீடு திரும்பிய போது தனது மனைவி ஆண்நண்பருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார். இதனால் கோபம் கொண்ட செந்தாமரை ஆண் நண்பரை அடித்து உதைத்தார். வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய ஜெயந்தி, தன்னுடைய கணவரிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் செந்தாமரையோ, ஜெயந்தியின் ஆண் நண்பரை அடித்து உதைத்துள்ளார்.

ஆண் நண்பரைக் காப்பாற்ற செந்தாமரையின் மர்ம உறுப்பைத் தாக்கியுள்ளார் ஜெயந்தி. தற்போது, செந்தாமரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது, இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்து, ஜெயந்தியிடமும் அவரின் ஆண் நண்பரிடமும் விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்