உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் நாற்காலியில் அமர்ந்த கருணாநிதி! வெளியான தகவல்

Report Print Kabilan in இந்தியா

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால், அவர் நாற்காலில் அமர வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 27ஆம் திகதி, உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டதால் கருணாநிதி நாற்காலியில் அமர வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறிது நேரம் நாற்காலி அமரவைத்து அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளை ஏற்றுக்கொண்டு கருணாநிதியின் உடல்நிலை ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செயற்கை சுவாசம் இல்லாமல் தானாகவே அவர் சுவாசிப்பதாகவும், தேவைப்படும்போது மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும், திரவ உணவு குழாய் வாயிலாக அவருக்கு செலுத்தப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்