மனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்ட கணவன்!

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்து போவதை கணவன் குடும்பத்தினர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் மதுரா குதியில் 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், மனமுடைந்து வீட்டின் கதவை தாழ்பாளிட்டு பூட்டி கொள்கிறார்.

திடீரென சேலை ஒன்றினை எடுத்து மின்விசிறியில் மாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். அனைவரும் வேண்டாம் வேண்டாம் என கூச்சலிட, ஒருவர் மட்டும் விடுங்கள் அவள் சாகட்டும் என திமிராக பேசுகிறார்.

வீடியோவை காண...

இதற்கிடையில் அந்த இளம்பெண் தூக்கில் தொங்கியபடியே துடிதுடித்து தற்கொலை செய்துகொள்கிறார். இதனை வீடியோவாக படம்பிடித்த கணவன் வீட்டை சேர்ந்த ஒருவர் இணையத்தில் பதிவிட்டதை தொடர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்