என்னை மன்னிச்சிருங்க: இறந்துபோன மாணவியின் உருக்கமான கடிதம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருச்சி மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த தேன்மொழி என்ற மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாணவி தேன்மொழி தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது அவர் எழுதிவைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியது,

அப்போது அவர் கைப்பட எழுதிவைத்த கடிதம் ஒன்று சிக்கியது.

அந்த கடிதத்தில், “நான் இதய பிரச்சனையால் நெஞ்சுவலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தேன். என்னால், வலியை தாங்கி கொள்ளமுடியவில்லை., எனவே, இந்த துயரமான முடிவை எடுக்க முடிவெடுத்தேன். யாரும் வருத்தப்படாதீங்க. கோபப்படாதீங்க, எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க” என எழுதப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்