மருத்துவமனையில் குவிந்த கூட்டம்...கருணாநிதியை சந்திக்க வந்த நடிகர் அஜித்: வெளியான வீடியோ

Report Print Santhan in இந்தியா

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்கு நடிகர் அஜித் சென்றுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் உடல் நிலை குறித்து அறிவதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்,

இன்று காலை கூட நடிகர் விஜய் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிவதற்காக, மருத்துவமனை சென்றிருந்தார்.

அங்கு அவர் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரான அஜித் கலைஞர் கருணாநிதியை சந்திப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் அஜித் மருத்துவமனைக்கு வரவிருப்பதாக முன்னரே தகவல் கசிந்ததால், மருத்துவமனை முன்பு ஏராளமான மக்கள் குவிந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்