கருணாநிதிக்காக வேதனையடைந்து 21 பேர் மரணம்: அதிர்ச்சி தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், திமுகவின் தீவிர தொண்டர்களில் சிலர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் தற்கொலை செய்தும் உயிரை மாய்த்துள்ளனர்.

இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்றிருக்கிறார் என்ற அதிர்ச்சி தாங்காமல் 21 பேர் இறந்த செய்தியால் மன அழுத்தத்தில் உறைந்து போயுள்ளதாகக் கூறியுள்ளார்.

உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், காவேரி மருத்துவமனை குறிப்பிட்டிருப்பது போல், கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அவரது உடல்நிலையை மருத்துவர்கள் அடங்கிய குழு, கண் அயாராது கண்காணித்து வருவதாகவும், மருத்துவமனைக்கு வந்து தொண்டர்கள் எழுப்பிய வாழ்த்து முழக்கங்கள் வீண் போகவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில், தொண்டர்கள் யாரும் தங்கள் இன்னுயிரை இழக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்