கருணாநிதியை சந்திக்க மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் கவுண்டமணி!

Report Print Vijay Amburore in இந்தியா

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதியை கொமடி நடிகர் கவுண்டமணி சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

வயது முதிர்ச்சி மற்றும் உடல்நிலை குறைபாடு காரணமாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்களின் முயற்சியால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ள கருணாநிதியை சந்தித்து பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர். இதனால் காவேரி மருத்துவமனை வளாகமே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சநட்சத்திரமாகி காமெடியில் வலம்வந்த நடிகர் கவுண்டமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் சென்று, திமுக தலைவர் கலைஞரை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்