உயரம் அறிந்து இந்திய பிரதமர் பதவியை நிராகரித்த கருணாநிதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

கடந்த அரை நூற்றாண்டு காலமாக கருணாநிதி இந்திய அரசியலின் அச்சாணியாக திகழ்ந்தவர்.

அத்தகைய கருணாநிதி இந்தியாவிற்கு பிரதமராகும் வாய்ப்பு 1996-ம் ஆண்டு தேர்தலின் போது கிடைத்தது.

காங்கிரஸ் இல்லாவிடில் பாஜகவே மத்தியில் ஆட்சியமைக்க கூடும் என கருதப்பட்டது. ஆனால் திடீரென மாநில கட்சிகளையெல்லாம் ஒருங்கிணைத்து ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது. அந்த கூட்டணிக்கு அச்சாணியாக திமுக தலைவர் கருணாநிதி திகழ்ந்தார்.

அப்போது நாடாளுமன்ற தேர்தலில் வென்றதன் பின்னர் ஐக்கிய முன்னணியின் பிரதமராக கூடிய வாய்ப்பை திமுக தலைவர் கருணாநிதி எட்டியபோது, ஆனால், என் உயரம் எனக்கு தெரியுமென அதனை கலைஞர் கருணாநிதி மறுத்துவிட்டர். அதன் பின்னரே கலைஞரின் ஆதரவுடன் தேவகவுடா பிரதமர் ஆனார்.

திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்திய தலைமை, மாநில சுயாட்சியின் மீதான பற்று தமிழ் - தமிழர் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தியே தமது அரசியல் களம் அமைந்திட வேண்டுமென கலைஞர் விரும்பியதன் காரணத்தினாலேயே பிரதமர் பதவியை மறுத்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்