2000 பேர் பார்த்துக் கொண்டிருக்க... பேஸ்புக் நேரலையில் பரிதாபமாக இறந்த இளைஞன்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்வதை பேஸ்புக் நேரலையில் 2,000 பேர் பார்த்தும் அவர் குறித்து யாரும் பொலிசாருக்கு தகவல் கொடுக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் பட்டோடி என்ற கிராமத்தில் வசிப்பவர் அமித் சௌஹான், குடும்பத் தகராறு காரணமாக இவரின் மனைவி தன் இரண்டு குழந்தைகளுடன் சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் துக்கம் தாங்காமல் இருந்த அமித் செளஹால் பேஸ்புக்கில் நேரலை செய்தவாறே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த திங்கட்கிழமை அமித்தின் மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலே பேஸ்புக் நேரலையில் அமித் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது அவர் தான் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாகவும், அதை அனைவரும் ஷேர் செய்ய வேண்டும் எனவும் கூறியபடியே, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இதை பேஸ்புக் நேரலையில் சுமார் 2000-பேர் பார்த்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் யாரேனும் பொலிசாருக்கு தகவல் கொடுத்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம், ஆனால் ஒருவர் கூட காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை.

அவர் நேரலை செய்த மறுநாள் யாரோ ஒரு நபர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததால், அவர்கள் அமித்தின் வீட்டிற்கு விரைந்துள்ளனர்.

ஆனால் பொலிசார் அங்கு சென்ற போது அமித்திற்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டுக் கொண்டிருந்துள்ளது. இருப்பினும் பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமித்தின் தந்தை அஷோக் சௌஹான், என் மருமகள் வீட்டை விட்டு வெளியே சென்றதும் அமித் தன் அறைகளை விட்டு வெளியே வரவில்லை.

இரவு 9 மணிக்கு அவனுக்கு உணவு கொடுப்பதற்காக அவனை அழைக்க சென்ற போது, அவன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி அமித்துக்கு சில காலமாகவே மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காகச் சிகிச்சை பெற்றுவந்தான்.

மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் என அனைவரிடமும் தினமும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பான். அவன் நடத்தை எனக்கு முற்றிலும் பிடிக்காததால், நான் அவனிடம் பேசுவதையே சில நாள்களாக நிறுத்திவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்