கருணாநிதியை சந்திக்க மருத்துவமனைக்கு சென்ற நடிகர் விவேக்

Report Print Kabilan in இந்தியா

தீவிர சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் விவேக் கேட்டறிந்தார்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருப்பவர் நடிகர் விவேக். அதன்படி, பல நிகழ்ச்சிகளில் அவரைப் பற்றி பேசி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோல், விவேக்கின் மகன் பிரசன்னகுமார் திடீரென்று இறந்தபோது, கருணாநிதி இரங்கல் கடிதம் எழுதி தனது வருத்தத்தை விவேக்கிற்கு தெரிவித்தார்.

தற்போது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியை, அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் என பலர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விவேக் இன்று பிற்பகல் காவேரி மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கிருந்தவர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த விவேக், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்பி, தமிழுக்கு தொண்டு ஆற்றுவார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்