நம்பி வந்தேன்! இப்படி ஆகியிருச்சு: பொலிசிடம் சிக்கிய பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கொள்ளையன் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் நம்பி வந்தேன், இப்படி மாட்டிக் கொண்டேன் என்று பொலிசாரிடம் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை மாவட்டம் போரூரை அடுத்த மதனந்தபுரம் முத்துமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர், நிர்மலா(56). இவரிடம் கடந்த 18-ஆம் திகதி வீடு வாடகைக்கு வேண்டும் என்று தம்பதியினர் கேட்டு வந்துள்ளனர்.

அந்த சமயத்தில் அவர் குடிக்க தண்ணீர் வேண்டும் கேட்டதால், உடனே நிர்மலா உள்ளே சென்ற போது, அவரை பின் தொடர்ந்த நபர் அவரை குத்தி அவரிடமிருந்த நகையை பறிக்க முயற்சி செய்தார்.

அப்போது நிர்மலா சாதுர்யமாக செயல்பட்டு அவரை தடுத்து, அதன் பின் கத்தியதால், அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.

இதையடுத்து அந்த நபரை பொலிசாரிடம் பிடித்து கொடுத்தனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த நபரின் பெயர் தட்சணா மூர்த்தி எனவும் பிரபல கொள்ளையன் என்பதும் தெரியவந்துள்ளது.

அவனை சிறையில் அடைத்த பொலிசார், உடன் வந்த பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த பெண்ணையும் நேற்று கைது செய்தனர்.

பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய பெயர் அமுதா எனவும், தான் தட்சணா மூர்த்தியின் வீட்டில் வேலை பார்த்து வந்தாகவும் கூறியுள்ளார்.

என்னுடைய வீட்டின் கஷ்டங்களை தட்சணா மூர்த்தியிடம் கூறிய போது, அவர் வாடகைக்கு வீடு கேட்கும் திட்டத்தை கூறினார்.

நானும் சரி என்று சொன்னவுடன், இருவரும் போரூரில் உள்ள நிர்மலாவின் வீட்டிற்கு சென்றோம். அங்கு இருவரும் கணவன், மனைவி போல் வீடு கேட்டோம்.

வீட்டை பார்த்த பிறகு வாடகை குறித்து பேசிய போது தான் நிர்மலாவைத் தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடிக்க தாக்கிய போது தான் தட்சணா மூர்த்தி சிக்கிக் கொண்டார்.

தட்சணாமூர்த்தியை நம்பி வந்தேன், தற்போது சிக்கிக்கொண்டேன் என்று பொலிசாரிடம் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்