16 வயது தங்கையை தாயாக்கிய கொடூர சகோதரன்: தாய்க்கு தெரிந்தே நடந்த அவலம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் சகோதரனே 16 வயது தங்கையை பலாத்காரம் செய்ததால் சிறுமி குழந்தை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டீகரில் பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பெண் குழந்தையை ஒரு வீட்டின் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விட்டுச் சென்றுள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் வீட்டின் உரிமையாளருக்கு தெரிவித்துள்ளனர்.

பின்னர் பொலிசுக்கு இது குறித்து தகவல் தரப்பட்ட நிலையில் அக்குழந்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து குழந்தையை விட்டு சென்றவர் வீட்டை கண்டுப்பிடித்த பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது 16 வயது சிறுமியை அவருடைய 17 வயது அண்ணன் ஒரு ஆண்டுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததும், இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் நடந்தது அந்த சிறுமியின் தாய்க்கும் தெரிந்துள்ளது.

இந்நிலையில் தான் சிறுமிக்கு பிரசவம் நடந்து பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு வருவதற்கு சென்றுள்ளனர். குழந்தைகள் காப்பகம் இருக்கும் இடம் தெரியாததால் ஒரு வீட்டின் முன்பு போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் சகோதரனை பொலிசார் கைது செய்தத்தோடு இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்