ஸ்டாலினா? அழகிரியா? காவேரி மருத்துவமனையில் ஓங்கும் கை.. ஒதுங்கும் நிர்வாகிகள்

Report Print Vijay Amburore in இந்தியா

கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் தங்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி குறித்து, திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம் நிர்வாகிகள் பலரும் புகார் தெரிவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறைபாடு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதியின் உடல்நிலை மோசமான அன்றைய தினமே மதுரையிலிருந்து மனைவி மற்றும் மகன் தயாநிதி அழகிரியுடன் கோபாலபுரத்திற்கு வந்தடைந்திருந்தார்.

ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு இடையே நீண்ட நாட்களாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை காரணமாக இருவரும் சமாதானமாகி பேசி, தெளிவான முடிவுகளையும் எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக லண்டனில் இருந்து தனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவரை ஸ்டாலின் அனுமதியுடன் அழகிரி வரவழைத்துள்ளார்.

இவர்கள் ஒருபுறம் சமாதானமாக இருக்க மறுபுறம், ஒன்றுமே தெரியாமல் எதையாவது பேசி கட்சி நிர்வாகிகள் பலரும் வாங்கி கட்டிக்கொள்கிறார்களாம்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், மாடிக்கு வர முற்பட்டபோது, வெளியே போகுமாறு அழகிரி அனுப்பியுள்ளார். பூ வைத்துக்கொண்ட கலைஞரை பார்க்க வந்த கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவரை கடிந்துகொண்ட அழகிரி, இது என்ன பிகினிக் இடமா என கூறியுள்ளார்.

அழகிரியின் கை ஒருபுறம் ஒங்க, மறுபுறம் அவரது மகன் தயா, மருத்துவமனைக்கு வெளியே அழுதுகொண்டிருந்த நிர்வாகி ஒருவரை பார்த்து, ஸ்டாலின், அழகிரியே அழாமல் இருக்கும்போது நீங்கள் ஏன் ரொம்ப ஓவரா போறீங்க என கேட்டுள்ளார்.

அன்றிலிருந்து அந்த நபரை மருத்துவமனை பக்கமே பார்க்க முடியவில்லை என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் திமுக நிர்வாகிகள் பலரும், அழகிரி குறித்து ஸ்டாலினிடம் புகார் கூறியுள்ளனர்.

எனக்கு இப்பொழுது தலைவரின் உடல்நிலை தான் முக்கியம். கொஞ்சம் பொறுத்து போங்கள் என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ஸ்டாலின்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்