விமானத்தில் மூச்சுத்திணறல்: 4 மாத கைக்குழந்தை பரிதாப பலி!

Report Print Vijay Amburore in இந்தியா

ஹைதராபாத் விமானத்தில் பயணம் செய்த 4 மாத கைக்குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் இருந்து பாட்னா செல்லும் இண்டிகோ விமானத்தில் 4 மாத கைக்குழந்தையுடன் ஒரு தம்பதியினர் பயணம் செய்துள்ளனர். அப்பொழுது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக ஹைதராபாத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு குழந்தை எடுத்து செல்லப்பட்டது.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். விமானத்தில் பச்சிளங்குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இண்டிகோ நிறுவனம் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...