பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது ஏறிய ஆடி கார்! 7 பேர் உடல் நசுங்கி பலி- பதறவைக்கும் காட்சிகள்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது ஆடி கார் மோதிய விபத்தில் ஏழு பேர் பலியாகினர்.

கோவை மாவட்டத்தில் சுந்தராபுரம் நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் பேருந்து நிறுத்தம் ஒன்றுக்கு அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் அருகில் இருந்த ஆட்டோ மீது கார் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 4 ஆண்கள், 3 பெண்கள் என 7 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர், உடனடியாக அக்கம்பக்கத்தினர் காரை சுற்றி வளைத்ததில் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவரை அடித்து உதைத்ததுடன் பொலிசிடம் ஒப்படைத்தனர், வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சம்பவ இடத்திலிருந்தவர்கள் கூறுகையில், மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டு வந்தார், இந்த இடத்தில் Speed Breaker வைக்க பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம், விபத்துக்கு இதுவும் ஒரு காரணம், ஓட்டுநருக்கு எந்த காயமும் இல்லை, ஆனால் அப்பாவி மக்களின் உயிர் பறிபோனது என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய கார், ரத்தினம் கல்லூரியின் சேர்மேன் மதன் செந்திலுக்குச் சொந்தமான கார் என்றும் காரை ஓட்டி வந்தவர் பெயர் ஜெகதீசன் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதறவைத்துள்ளன.

வீடியோவை காண

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்