நிர்வாண நிலையில் வெட்டப்பட்டு துண்டாக குளத்தில் மிதந்து வந்த பெண்ணின் கால்கள்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் இளம் பெண் ஒருவரின் உடல் நிர்வாண நிலையில் துண்டாக வெட்டப்பட்டு குளத்தில் மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியில் செல்வாம்பதி என்ற குளம் உள்ளது.

இந்த குளத்தில் கடந்த 25-ஆம் திகதி சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் மிதந்து வந்துள்ளது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பொலிசார் அங்கு விரைந்து வந்து பார்த்த போது மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏனெனில் நிர்வாண நிலையில் வந்த அந்த பெண்ணின் சடலம் முழுமையாக இல்லை. கழுத்தும், இரு கைகளும் வெட்டப்பட்டிருந்துள்ளது.

வயிறு, இடுப்பு, இரு கால்களையும் காணவில்லை. கழுத்து, கைகள் மிக மிக கூர்மையான ஆயுதத்தால் துல்லியமாக வெட்டப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து தலை முதல் இடுப்பு வரை உள்ள பகுதி தனியாக ஒரு அரிசி மூட்டைக்குள் வைத்து குளத்தினுள் வீசப்பட்டுள்ளது.

ஆனால் பெண்ணின் கால்கள் மட்டும் காணவில்லை என்பதால், குளத்தில் மீன் வலையை வைத்து தேடியுள்ளனர். ஆனால் கால்கள் கிடைக்கவில்லை.

தொடர்ந்து குளத்தில் பெண்ணின் கால்களை பொலிசார் தேடிக் கொண்டிருந்த போது, அந்த குளத்திலே இரண்டு கால்கள் மிதந்து வந்துள்ளன.

கொலை செய்யப்பட்டு நான்கு நாட்கள் ஆகியிருக்கும் எனவும் கொலையுண்ட பெண் யார், எதற்காக கொல்லப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர்.

காணமல் போன பெண்களின் புகைப்படங்களை வைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்