என் உயிருக்கு ஆபத்து: நடிகை ரோஜா பரபரப்பு பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நடிகையும், எம்.எல்.ஏ-வுமான ரோஜா தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஜா அளித்துள்ள பேட்டியில், சாலை மறியல் போராட்டம் நடந்த 3 நாட்களுக்கு பின்னர் என் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எந்த தவறும் செய்யாத என்னை ஒரு வருடம் சட்டமன்றத்துக்குள் நுழையவிடாமல் செய்தார்கள்.

ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரிடம் இருந்து எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆனால் நான் எதற்கும் பயப்படமாட்டேன். நியாயத்துக்காக தொடர்ந்து போராடுவேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்