கருணாநிதியை சந்திக்க மருத்துவமனை வந்த நடிகர் விஜய்: வெளியான புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திப்பதற்காக பிரபல திரைப்பட நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் உடலநிலை குறித்து அறிவதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்,.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரான விஜய் கலைஞர் கருணாநிதியை சந்திப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் அங்கிருக்கும் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

அது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers