மருத்துவமனையில் கருணாநிதி: ஸ்டாலின் இப்படி செய்யலாமா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியை சந்திப்பதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என பலரும் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

அவ்வாறு மருத்துவமனைக்கு வருபவர்களை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து வருகின்றார். இதுதொடர்பான புகைப்படம் திமுக ஐடி விங்க் மூலம் உடனுக்குடன் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.

இதில், சந்திக்க வரும் தலைவர்களில் குறிப்பிட்ட ஒரு சில தலைவர்களின் புகைப்படங்களை மட்டுமே ஸ்டாலின் தரப்பு வெளியிட்டு வருகிறது. இதில் கூட ஸ்டாலின் பாரபட்சம் காட்டுகிறார். தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் கருணாநிதியை சந்திக்கும் புகைப்படங்கள் வெளியாகவில்லை.

அதே, சமயத்தில் துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை சந்தித்த புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில், ரஜினி காவேரி மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

ரஜினி, ஸ்டாலினை மட்டும் சந்திக்காமல் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியையும் சந்தித்துள்ளார். இது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இதுதொடர்பான புகைப்படத்தை ஸ்டாலின் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாக அழகிரியின் மகன் துரை தயாநிதி இந்த சந்திப்பு புகைப்படத்தை உடனடியாக வெளியிட்டார்.

இவர், வெளியிட்ட சிறிது நேரம் கழித்து ஸ்டாலின் தரப்பினர் புகைப்படத்தை வெளியிட்டனர். இப்படி தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கையில், அண்ணனும், தம்பியும் இணைந்து எதற்காக அரசியல் செய்கிறார்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்