கருணாநிதியின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்?

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், திமுகவின் தீவிர விசுவாசிகள் இதனை தாங்கிகொள்ள முடியாமல் மன வேதனையடைந்து உயிரிழந்துள்ள சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு கூட கருணாநிதியின் உடல்நிலை கேள்விப்பட்டு திருவாரூரில் திமுக நிர்வாகி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கோவையிலும் ஒரு தொண்டர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்தியை டிவியில் பார்த்துகொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல, சென்னை எண்ணூரிலும் திமுகவின் தீவிர தொண்டர் ஒருவர் துக்கத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியிலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரமி என்பவர் துப்புரவு பணியாளராக உள்ளார். 55 வயதான பெரமி, தீவிரமான திமுகவின் ஆதரவாளர்.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதித்த நாளிலிருந்தே, அவரது உடல்நலம் தற்போது எப்படி உள்ளது என அப்பகுதி மக்களிடம் அடிக்கடி கேட்டு வந்தார்.

இதில் நேற்று முன்தினம் மாலை கருணாநிதி உடல்நிலை குறித்த வதந்தி காட்டுத்தீ போல் பரவியதால், அதிர்ச்சி அடைந்த பெரமி மயங்கி கீழே விழுந்தார். இதில் அந்த இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி. ஓய்வுபெற்ற ஆசிரியரான இவருக்கு வயது 60. கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவிய தகவல்களை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, மாரடைப்பினால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்த பகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்