கருணாநிதியும் கருப்பு கண்ணாடியும்: ஒளிந்திருக்கும் 47 ஆண்டு கால ரகசியம்

Report Print Arbin Arbin in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிரார்.

தனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்கையில் வெற்றி நடைப்போட்டு பயணித்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவருடைய தனிப்பட்ட அடையாளமாக மாறிப் போனது தான் அவர் அணியும் கருப்பு கண்ணாடி.

1971 ஆம் ஆண்டிலிருந்து தான் கருணாநிதி கருப்பு கண்ணாடி அணிய ஆரம்பித்தார். அமெரிக்காவில் உள்ள ஜான் ஹிப்கின்ஸ் மருத்துவமனையில் கலைஞருக்கு கண் பரிசோதனை செய்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவரை கண்ணாடி அணிய செய்தனர்.

அப்போது அணிய ஆரம்பித்த அந்த கருப்பு கண்ணாடியை 46 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றி விட்டார்.

கருப்பு கண்ணாடி கூடுதலான எடை கொண்டதால் அவரது கண்ணில் அழுத்தம் தந்து வலியை ஏற்படுத்துகிறது என கூறி அந்த கண்ணாடி மாற்றப்பட்டு, வேறு கண்ணாடியை அணிய தொடங்கினார்.

புதிய கண்ணாடியை 40 நாட்கள் ஆலோசனைக்கு பிறகு, அவருக்கு ஏற்ற கண்ணாடியை ஜேர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்