கருணாநிதி சீக்கிரம் குணமடைய வேண்டும்: காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த்

Report Print Arbin Arbin in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் காவிரி மருத்துவமனைக்கு சென்ற, நடிகர் ரஜினிகாந்த், உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி.

அவரை தேசியக்கட்சி தலைவர்கள் முதல் பல்வேறு மாநில தலைவர்கள் சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இரவு 8.45 மணிக்கு காவிரி மருத்துவமனை சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.

சுமார் 15 நிமிடங்கள் காவிரி மருத்துவமனைக்குள் நேரம் செலவிட்ட ரஜினிகாந்த், பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதி உடல் நலம் விசாரிக்க வந்தேன். அவர், தூங்கிக்கொண்டிருந்தார். அண்ணன் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, செல்வம் எல்லோரும் அங்கே இருந்தனர்.

அவர்களுக்கு நான் ஆறுதல் சொன்னேன். அது ஒன்றுதான் என்னால் செய்ய முடியும். கருணாநிதி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கருணாநிதி மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நீண்ட கால நண்பர்களாகும். 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என வெளிப்படையாக அறிவித்தவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்