கருணாநிதியை காப்பாற்ற களத்தில் இறங்கிய மூத்த மகன் அழகிரி: எப்படி தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

தந்தை கருணாநிதியை காப்பாற்ற மு.க.அழகிரி வெளிநாட்டு மருத்துவர்களுடன் சிகிச்சை குறித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, அவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கட்சி தொடர்பான விவகாரங்களில் எதிலும் ஈடுபடாமல் இருந்தார்.

இருப்பினும் தந்தை உடல் நிலை காரணமாக வீட்டில் படுத்து கிடந்ததைப் பார்த்து கண்ணீர் விட்டார்.

சென்னை வந்த இவர் தந்தையை மருத்துவமனையில் அனுமதித்தவுடன் தினமும் மருத்துவமனைக்கு சென்று வருகிறார்.

மேலும் தந்தைக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்களை கேட்டறியும் அவர், வெளிநாட்டு மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை செய்ய முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு மருத்துவர்களுக்கு தந்தையைப்பற்றிய மருத்துவ தகவல்களை அனுப்பி ஆலோசனை கேட்டு வருவதாகவும், வெளிநாட்டு மருத்துவர்களை காவேரி மருத்துவமனை மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தும் ஏற்பாட்டையும் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று மாலை கருணாநிதி நலமாக இருக்கிறார் என்பது தொடர்பான புகைப்படம் வெ`ளியாகி தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்