கருணாநிதி மருத்துவமனையில் இன்னும் எத்தனை நாட்கள் தங்க வேண்டும்? வெளியான மருத்துவமனையின் புதிய அறிக்கை

Report Print Santhan in இந்தியா

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து புதிய அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி தொடர்பான சமீபத்திய புகைப்படம் வெளியாகி தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தற்போது மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. மருத்துவ சிகிச்சைக்கு கருணாநிதி முழு ஒத்துழைப்பு தருகிறார்.

29-ஆம் திகதி ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

ரத்தம், கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது. வயது காரணமாக மருத்துவமனை உதவி அவருக்கு இன்னும் சில நாட்களுக்கு தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்