அம்பலமான கருணாநிதியின் ரகசிய வாழ்க்கை

Report Print Deepthi Deepthi in இந்தியா

கலைஞர் கருணாநிதியின் குடும்ப வாழ்க்கை பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள், அவருக்கு மூன்று மனைவிகள்.

முதல் மனைவியான பத்மாவதி அவர்களுக்கு, எம்.கே. முத்து என்று ஒரு மகன் பிறந்தார், திருமணமான சில ஆண்டுகளிலேயே அவர் மரணமடைந்தார்.

கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்களே அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்கு பிறந்தவர் தான் கனிமொழி.

1950 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! இது.

முதல் மனைவி பத்மாவதி இறந்த நிலையில், சினிமாவிலும் அரசியலிலும் இருந்த கருணாநிதிக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை.

அந்தச் சூழ்நிலையில் சீர்காழிக்கும் பூம்புகாருக்கும் இடையே ஒரு சிற்றூரில் ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் தகவல் அறிந்து, அந்தப் பெண் வீட்டாரிடம் போய் கருணாநிதிக்குப் பெண் கேட்டார் எம்.கே.டி.சு.

பெண் தர மறுத்த பெண்ணின் தந்தையிடம், ‘என்றாவது ஒரு நாள் என் நண்பர் எம்.எல்.ஏ.வாக வாய்ப்பிருக்கிறது. அவருக்குப் பெண் கொடுங்கள்’ என்றதும், சம்மதித்திருக்கிறார் அந்தத் தந்தை. அந்தப் பெண்தான் தயாளு அம்மாள்.

அப்படிப்பட்ட எம்.கே.டி.சுப்பிரமணியம் சிறைத் தண்டனை பெற கருணாநிதி எப்படி காரணமானார்?

எம்.கே.டி.சுப்பிரமணியம் நடத்திய ‘ஜவகரிசம்’ பத்திரிகையில், 1970-ம் ஆண்டு ஒரு செய்தியை வெளியிட்டார். அதில் ‘குறிப்பிட்ட நாளில், சென்னையில் ஒரு மருத்து வமனையில் குறிப்பிட்ட இந்த நேரத்தில் ராஜாத்தி என்ற பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்தப் பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி?’ என்று ஒரு பெட்டிச் செய்தி வெளியிட்டிருந்தார்.

அந்தச் செய்தி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘‘அந்தப் பெண் யார் என்று எனக்குத் தெரியாது... எந்தப் பெண் குழந்தையும் எனக்கில்லை...’’ என்று நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.

முதல்வர் பதவிக்கு களங்கம் விளைவித்ததாக நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குப் போட்டார். அதில் ‘ஜவகரிசம்’ பத்திரிகை ஆசிரியர் எம்.கே.டி.சு.வை நீதிமன்றம் வரை இழுத்தடித்தார். அந்தக் காலகட்டத்தில் அவரால் அந்தச் செய்திக்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை.

இதனால் ஒரு மாதம் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார் எம்.கே.டி.சுப்பிரமணியம். அதுமட்டுமல்ல, சட்டப்பேரவையில் எதிர்க்க ட்சி உறுப்பினர் ஒருவர், ராஜாத்தி அம்மாள் பற்றி கேட்ட கேள்விக்கு, ‘அந்தப் பெண் என் மனைவி இல்லை. ஆனால் அவர் என் மகள் கனிமொழியின் தாய்’ என்று வித்தியாசமான விளக்கம் கொடுத்தார்.

ஆனால், காலப்போக்கில் அவை எல்லாம் மறந்து, 2ஜி வழக்கில் தனது மகள் கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்ட போது கண்ணீர் சிந்தினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்