இந்தியாவிற்குள் தமிழக அகதிகள் வருகின்றனர்: நாடாளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்திய மத்திய அமைச்சர்!

Report Print Vijay Amburore in இந்தியா

இந்தியாவிற்கு அதிக அளவில் தமிழக அகதிகள் வருவதாக மத்திய அமைச்சர் கூறிய கருத்தால் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் பொழுது பாஜகவை சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் Kiren Rijiju, இந்தியாவிற்குள் அதிகதிகளாக நுழையும் ரோகிங்கியா முஸ்லிம்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

அப்போது தமிழகம், வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து அதிகமான அகதிகள் இந்தியாவிற்கு வருவதாக குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக, திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட காட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதனால் நாடாளுமன்ற அவையில் சிறிது நேரம் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தனது தவறை புரிந்து கொண்ட மத்திய அமைச்சர் உடனடியாக தான் கூறுவது இலங்கையிலிருந்து வரும் தமிழ் அகதிகள் என விளக்கம் அளித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்