தமிழர்களே.. உங்களிடம் ஒரு கேள்வி! தீயாய் பரவும் கருணாநிதி பற்றிய சர்ச்சை டுவிட்

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சர்ச்சைக்குரிய டுவிட்டை பதிவு செய்துள்ளார்.

உடல்நலக் குறைவால் கலைஞர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று திமுக தொண்டர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தமிழர்கள் பலரும் மருத்துவமனையில் உள்ள கருணாநிதிக்காக அனுதாபப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது.

அரசியல் பிரவேசத்துக்கு முன்னதாக கருணாநிதியிடம் இருந்த சொத்து என்னென்ன? அரசியல் வாழ்வில் நுழைந்த பிறகு அவரது மனைவி மகன் ஸ்டாலின், மகள் கனிமொழி, மாறன் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் உள்ள சொத்து எவ்வளவு? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

காமராஜர் மறையும் போது அவரிடம் எதுவுமே இல்லை. என்ன ஒரு நேரெதிர் நிலை எனப் பதிவு செய்திருக்கிறார்.

இவரின் இந்த டுவிட்டைக் கண்ட திமுகவினர் அவருக்கு எதிராக கண்டனப் பதிவுகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மேலும் கட்ஜூ இது போன்ற சர்ச்சைக் கருத்துகளை சமூக வலைதளங்களில் பலமுறை பதிவேற்றம் செய்திருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை வர்ணித்து கட்ஜூ பதிவு செய்த முகநூல் நிலைத்தகவல் கடும் கண்டனங்களைப் பெற அதை பின்னர் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்