இரண்டு பேருடன் தகாத உறவு வைத்திருந்த பெண்: கலெக்டர் பி.ஏ கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கலெக்டர் பி.ஏ கொலை வழக்கில் தகாத உறவு தான் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கலெக்டரின் பி.ஏவாக பணிபுரிந்து வந்தவர் பூபதி கண்ணன். இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார்.

இருவரும் திருச்சியில் இருந்து காரில் புதுக்கோட்டை கலெக்டர் ஆபீஸுக்கு தினமும் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 27-ஆம் திகதி வழக்கம் போல் காரில் புறப்பட்டு சென்ற பூபதி வீடு திரும்பவே இல்லை. அவர் மாத்தூர் அருகே சரமாரியாக வெட்டப்பட்டு சடலமாகக் கிடந்தார்.

இதனால் விரைந்து வந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின் அவரது காரை சோதனை செய்த போது அதில், மதுபாட்டில்கள், பெண்ணின் உள்ளாடைகள் போன்றவை இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து பூபதி கண்ணனின் போனை பொலிசார் ஆய்வு செய்த போது, அவர் ஒரு பெண்ணுடன் நீண்ட நேரம் பேசியிருப்பது தெரியவந்தது.

இதனால் பொலிசார் அந்த பெண் யார் என்று விசாரணை செய்த போது, அவர் புதுக்கோட்டை கலெக்டர் ஆபிசில் பணி புரியும் சவுந்தர்யா என்பது தெரியவந்துள்ளது.

அவரின் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுந்தர்யா, லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூரைச் சேர்ந்தவர். இவரது கணவரான சுரேஷ் குளித்தலை வேளாண்மை துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

சவுந்தர்யா திருமணம் செய்வதற்கு முன்பு ஒருவரை காதலித்துள்ளார். திருமணத்திற்கு பின்பு இவர்களின் காதல் தொடர்ந்துள்ளது. இதை அறிந்த சுரேஷ் இருவரையும் கண்டித்துள்ளார்.

இருப்பினும் விரக்தியில் சுரேஷ் தற்கொலை செய்துகொண்டார். இதனால் சுரேஷ் வேலை பார்த்து வந்த வேளாண் துறையில் கருணை அடிப்படையில் சவுந்தர்யாவுக்கு டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது.

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தர்யா சேர்ந்துள்ளார். முன்னாள் காதலன் அவருக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்துள்ளார்.

சவுந்தர்யாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அப்போது தான் சவுந்தர்யாவுக்கு பூபதி கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளைடைவில் நெருக்கமாகியுள்ளது.

கடந்த 27-ஆம் திகதி இருவரும் ஒன்றாக புதுக்கோட்டைக்கு காரில் செல்வதை அறிந்த சவுந்தர்யாவின் பழைய காதலன் இருவரையும் தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன் படி இருவரும் காரில் சென்ற போது கூலிப்படை மூலம் சவுந்தர்யாவின் காதலன் தீர்த்துகட்டியுள்ளான், மேலும் இந்த கொலை விவகாரத்தில் சவுந்தர்யாவுக்கு தொடர்பு உள்ளதா என்னும் கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்