வைரலாகும் கருணாநிதி தந்தையின் அபூர்வ கடிதம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் தந்தை முத்துவேலரும் சிறந்த கவிஞராக திகழ்ந்திருக்கிறார்.

தனது சொந்த ஊரான திருக்குவளையில் வசித்தாலும், அருகில் இருந்த பெருநகரமான திருவாரூரில் இருந்த கமலாம்பிகா கூட்டுறவு வங்கியில் 5 ஷேர்களை வாங்கியிருந்தார்.

அவர் வங்கியின் செயலாளருக்கு எழுதிய கடிதம் இதோ,

திருவாரூர்.

16.1.46

திருவாரூர் கமலாம்பிகா கோவாப்பிரேட்டிவ் அர்பன் பேங்க் செகரட்டரி அவர்களுக்கு. நம்பர் 3762 அ.முத்துவேல்பிள்ளை எழுதிக்கொண்டது.

இப்பவும் எனக்கு வயது 70-க்குமேல் அதிகமாகி நடக்கமுடியாமல் பலஹீனமாக இருக்கிறபடியாலும், கண்பார்வை மங்கலாயிருப்பதினாலும் பாங்கில் வரவுசெலவை வைத்துகொள்ள செளக்கியமில்லாததினால் எனக்கு பாங்கில் இருக்கும் 5 ஷேர்களையும் எனக்கு வாரிசாக உள்ள என்மகன் கருணாநிதியின் பெயரில் மாற்றிக்கொடுக்கக் கேட்டுக்கொள்கிறேன். நான் தற்போது எனது கிராமத்தில் வசித்து வருகிறேன்.

இப்படிக்கு,

முத்துவேல்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்