கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை முன்பு நள்ளிரவில் மீண்டும் பரபரப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பு நள்ளிரவில் ஏராளமான தடுப்புகள் வைக்கப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் காவேரி மருத்துவமனையில் இரவு முதலே பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொலிசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

திமுக தலைவரின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தாலும், தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் காவேரி மருத்துவமனை முன்பு கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏராளமான தடுப்புகள் வைக்கப்பட்டதால் தொண்டர்களிடையே மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஆனால் அது பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே என அதிகாரிகள் தரப்பு விளக்கமளித்த பின்னரே தொண்டர்கள் அமைதியடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers