கருணாநிதி குறித்து தவறாக பதிவிடாதீர்கள்: சீமான் அறிவுரை

Report Print Deepthi Deepthi in இந்தியா

உடல்நிலை சரியில்லாமல் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கையில், இந்த சூழ்நிலையிலும் அவர் குறித்த எதிர்மறையான விமர்சனங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

பாஜக, நாம் தமிழர் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருக்கு அறிவுரை வெளியிட்டு இருக்கிறார். அதில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக இணையதளங்களிலும் எதிர்மறை கருத்துகளை நாம் தமிழர் கட்சியினர் பதிவிடக்கூடாது.

பதிவிட்டால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும். அவர் உடல்நிலை தேறி மீண்டும் அரசியல் தளத்தில் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்