கருணாநிதியின் உடல்நிலை: காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை

Report Print Arbin Arbin in இந்தியா

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவர்கள் குழு கருணாநிதியை கண்காணித்து வருவதாகவும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையால் மருத்துவமனை முன் திரண்டிருத்த திமுக தொடண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

வயது முதிர்வு மற்றும் நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக நலிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமானது.

எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்