நோயை எதிர்ப்பதிலும் போராடும் கருணாநிதி: மருத்துவர்கள் ஆச்சர்யம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழக அரசியலில் 70 ஆண்டுகளுக்கு மேல் பல மூத்த தலைவர்களுடன் அரசியல் செய்த தமிழகம் தாண்டி இந்திய அரசியலிலும் மிக மூத்த தலைவர் என்ற புகழ்பெற்றவர் கருணாநிதி.

அரசியலில் எந்த அளவுக்கு தளராமல் போராடி வந்தாரோ, அந்த போராட்ட குணத்தை தற்போது தனது உடல்நலத்திலும் காட்டுகிறார்.

நேற்றிரவு அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்து குடும்பத்தார் அனைவரும் கோபாலபுரத்தில் குவிந்தனர். ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது என மருத்துவர்கள் அறிவித்தவுடன், கனிமொழி ஒருபக்கம் அழ அனைவரும் அழ ஆரம்பிக்க ஸ்டாலினுக்கும் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.

தமிழக மக்கள் அன்றுதான் ஸ்டாலின் கண்ணீர் வடிப்பதை பார்த்தார்கள். பின்னர் அனைவரும் முடிவெடுத்து காவேரி மருத்துவமனைக்கு உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்றனர். அங்கு உடனடியாக சிகிச்சை கொடுக்கப்பட்டது.

இருந்தாலும், 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு அதை கிரகித்துக்கொண்டார். அவரது ரத்த அழுத்தம் சீரானது. போராடும் அவர் குணத்தை தா.பாண்டியனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், இயற்கை அவரை வெல்ல அவருடன் போராடுகிறது என்று சொல்லலாம்.

தனது மனோவலிமையால் இயற்கையை எதிர்த்து போராடும் கருணாநிதி மருத்துவர்களுக்கே ஆச்சர்யமாக உள்ளது. அவரது மனோதிடம் இன்றைய இளம் அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers