கல்லூரி மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்ற பொலிசார்: வைரலான வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

அலகாபாத்தில் பாஜக தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது அவர் வருகைக்கு எதிராக கோஷமிட்ட கல்லூரி மாணவியை ஆண் பொலிசார்கள் முடியை பிடித்து இழுத்து சென்ற வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

''கோ பேக் அமித்ஷா'' என்ற முழக்கத்துடன் கல்லூரி மாணவி இருவர் மற்றும் ஒரு கல்லூரி மாணவனும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வரிசையாக வந்துகொண்டிருந்த கார் முன்பு பொலிசாரின் தடையை மீறி உள்ளே புகுந்த அந்த மாணவிகள் தொடர்ந்து எதிர் கோஷங்களை எழுப்பி காரை வழிமறித்தனர்.

இவர்களை பொலிசார் கைது செய்கையில், அந்த மாணவிகளில் வெள்ளை நிற ஆடை உடுத்தியுள்ள மாணவியின் முடியை பிடித்து ஆண் காவலர் ஒருவர் வண்டியில் ஏற்றிய வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers