நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்தனர்: பல ஆண்களை காதல் வலையில் வீழ்த்திய நடிகை ஸ்ருதி புகார்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கடந்த மார்ச் மாதம் பல ஆண்களை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி அவர்களிடம் பணம் பறித்த நடிகை ஸ்ருதி தனது குடும்பத்தாருடன் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்ருதி தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

அவர் கூறியதாவது, நான் யாரையும் திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றவில்லை. அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகள்.

விசாரணையின் போது என்னை நிர்வாணமாக்கி, பெண் பொலிசை வைத்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அதனை இணைய தளத்தில் வெளியிட்டு உனது வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்று மிரட்டினர்.

மேலும் உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கி போனால் கொஞ்சம், கொஞ்சமாக இந்த வழக்கில் இருந்து உன்னை விடுவித்து விடுவோம் என்று மிரட்டினார்கள். மேலும் என்னை விசாரிக்க வரும் போலீசாரும் பாலியல் ரீதியாக எனக்கு துன்புறுத்தல்களை கொடுத்து வந்தனர்.

பொலிஸ் விசாரணை முடிந்ததும் நீதிபதியிடம் இது குறித்து நான் புகார் அளித்து உள்ளேன் என கூறியுள்ளார்.

திருமண ஆசை காட்டி பலரை ஏமாற்றிய நடிகை குண்டர் சட்டத்தில் கைது
நடிகை ஸ்ருதியின் வலையில் விழுந்த ஆண்கள்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்