நண்பர்களால் முழு சந்திர கிரகணத்தையொட்டி நரபலி கொடுக்க நினைத்த இளைஞர் தந்திரமாக தப்பி ஓட்டம்

Report Print Kavitha in இந்தியா

ஆந்திராவில் நண்பர்களால் முழு சந்திர கிரகணத்தையொட்டி நரபலி கொடுக்க நினைத்த இளைஞர் தப்பித்து ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கிருஷ்ணா மாவட்டம் எழமந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன், அதே கிராமத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் உட்பட ஏழு பேர் பிரவீனை முழுசந்திர கிரகணதின் போது ஆழ்நடமாட்டம் இல்லாத காட்டிற்குள் அழைத்துச் சென்று நரபலி கொடுக்க நினைத்துள்ளனார்.

அங்கு அவர்கள் ஏற்கனவே புதைக்குழி வெட்டி இருப்பதை கண்டு பிரவீன பீதி அடைந்துள்ளார். அவர்கள் நரபலி கொடுக்க போவதை அறிந்து கொண்ட அவர் நூலிழையில் உயிர்தப்பி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் கூறித்து பிரவீன் கூறுவதாவது:

முதலில் ஒரு கோயிலில் பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். அங்கிருந்து பைக்கில் ஏறி 1 கிலோ மீட்டர் தூரம் சென்று வேறு கோயிலில் பூஜை செய்ய இருப்பதாக காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மேலும் 3 பேர் வந்தனர் ஏற்கனவே அங்கு குழி வெட்டப்பட்டு இருந்தது. இதனை கண்டு எனக்குப் பயம் ஏற்பட்டது.

அப்போது சந்தேகப்படும்படியாக அவர்கள் கத்தியை வெளியே எடுத்தார்கள். நான் கத்தியை தட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பித்து வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

பிரவீன் அளித்த புகரை அடுத்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்