தொடரும் கனமழையால் உத்திரபிரதேசத்தில் 49 பேர் பலி

Report Print Kavitha in இந்தியா

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆக்ரா, முசாபர் நகர், மீரட், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன

கனமழை காரணமாக இடி மின்னல் ஆகியவை தாக்கின, பல வீடுகள் இடிந்து விழுந்தன. அதுமட்டுமின்றி போக்குவரத்து பெரும் பாதிப்படைந்துள்ளது அப்பகுதி மக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இதில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து இதுவரை 49 பேர் பலியாகி உள்ளனர் என்று நிவாரண ஆணையர் அலுவலகச் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

அவர்களில் சஹாரன்பூரில் அதிக அளவாக 11 பேரும், ஆக்ரா மற்றும் மீரட் ஆகிய நகரங்களில் தலா 6 பேரும், மெயின்பூரி பகுதியில் 4 பேரும், காஸ்கஞ்ச் பகுதியில் 3 பேரும், பரேலி, பாக்பத் மற்றும் புலந்த்சாஹர் பகுதிகளில் 2 பேரும் பலியாகி உள்ளனர்.

மேலும் உத்தர பிரதேசத்தின் கான்பூர் தேஹத், மதுரா, காஜியாபாத், ஹாபூர், ரேபரேலி, ஜலான், ஜான்பூர், பிரதாப்கார்ஹ், பண்டா, பிரோசாபாத், அமேதி, கான்பூர் மற்றும் முசாபர்நகர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் மழைக்கு பலியாகி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மழையில் சிக்கிய மக்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்