கருணாநிதியை தொடர்ந்து மற்றொரு அரசியல் தலைவர் மருத்துவமனையில் அனுமதி: தமிழகத்தில் பரபரப்பு

Report Print Raju Raju in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியை தொடர்ந்து மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தா.பாண்டியனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்