கருணாநிதியின் தற்போதைய உடல்நிலை நிலவரம் என்ன? வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்னும் சிறுநீரக தொற்று குணமாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடலில் மூன்று விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது, அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை நேற்று இரவு மோசமான நிலையை அடைந்தது, ஆனால் அவருக்கு தற்போது உடல்நிலை கொஞ்சம் சரியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரின் ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும், ஆனால் சிறுநீரக நோய் தொற்று இன்னும் குணமாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கருணாநிதிக்கு மொத்தம் 8 மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers