முதல்முறையாக கருணாநிதியை இப்படி பார்த்து கதறி அழுத தமிழன் பிரசன்னா: நெகிழ்ச்சியடைய வைத்த காட்சி

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைவு காரணமாக நேற்று இரவு 1.30மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. கலைஞரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு அவர் தனது கோபாலபுர இல்லத்தில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, தொண்டர்கள் வீட்டு வாசலில் குவிந்தனர்.

இதில், திமுகவின் செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, தனது தலைவரை தூக்கிசெல்வதை பார்த்து கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கருணாநிதி, இதுவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படவில்லை.

தன்னுடைய வாகனத்தில் அமர்ந்துதான் சிகிச்சைக்காக மருத்துமனைக்கு சென்றுவந்துள்ளார் கருணாநிதி. ஆனால், முதல்முறையாக ஆம்புலன்ஸில் அழைத்து செல்வதை தாங்கிகொள்ள முடியாமல் ஸ்டாலின், கனிமொழி மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கண்கலங்கினர்.

குறிப்பாக, திமுகவின் செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா கதறி அழுதுள்ளார். அவர் கண்ணீர் விட்டு அழும் காட்சி வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்