தஞ்சையில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து :15,00,000 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

Report Print Kavitha in இந்தியா

தஞ்சையிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை நகரின் மையப்பகுதியில் உள்ள மேற்கு எல்லையம்மன் கோயில் தெருவில் இன்று அதிகாலை பால்ராஜ் என்பவரின் வீட்டில் எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததுள்ளது.

இதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்கும் பரவியதில் 13 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததால் மற்றும் 15,00,000 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

மேலும் வீட்டிற்குள் இருந்தவர்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பாதுகாப்பாக வெளியேறி விட்டனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சிறுது நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்