மருத்துவமனையில் கருணாநிதி! அதிர்ச்சியில் திமுக நிர்வாகி மரணம்

Report Print Fathima Fathima in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்ததை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த திமுக நிர்வாகி மாரடைப்பால் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதன் பலனாக உடல்நலம் தேறி வருகிறது.

இந்நிலையில் கருணாநிதி தொடர்பில் நேற்று சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவின.

இதனால் தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர்.

இந்நிலையில் செயல் தலைவர் முக ஸ்டாலினும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறியிருந்தார்.

இருப்பினும் காட்டுத்தீப் போல் பரவிய தகவலால் துக்கம் தாளாமல், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த திமுக நிர்வாகி தமீம்(வயது 50) மாரடைப்பால் காலமானார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers